அதிக வெப்ப சர்ச்சை: மத்திய, மாகாண அரசுகளுக்கிடையில் அகோரம் தணியுமா?

0
215

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

c2982ff3-4017-4de2-9895-4d522ac0ed2bஅதிக வெப்ப நிலை காரணமாக பாடசாலைகளை நண்பகல் 12.00 மணியுடன் மூடப்படுவது தொடர்பாக மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்குமிடையில் சர்ச்சை எழுந்துள்ளது.

அதிக வெப்ப நிலை காரணமாக கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண பாடசாலைகள் இந்த வாரம் தொடக்கம் நண்பகல் 12.00 மணியுடன் மூடப்படுகின்றன.

இருப்பினும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய பாடசாலைகள் வழமை போல் நடைபெறுகின்றன.

மாகாண சபைகளினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை உடனடியாக கைவிடுமாறு மத்திய சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகள் கேட்டுள்ளன.

தற்போது காணப்படும் அதிக வெப்ப நிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு உட்பட உரிய துறை அதிகாரிகள் கூடி ஆராய்ந்த பின்னரே அதனைக் கைவிடுமாறு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண மாகாண சபைகள் கேட்கப்பட்டுள்ளன.

பகல் வேளைகளில் 11.30ற்கும் 1.30ற்கும் இடைப்பட்ட வேளையிலே அதிக வெப்பம் காணப்படுவதால் அவ் வேளையில் மாணவர்களின் வெளிநடமாட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வகுப்பறைகளில் காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்தல், குடி நீர் வசதிகளை ஏற்படுத்தல், கழுத்து பட்டி அணிதலில் விதிவிலக்களித்தல் போன்ற மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் மத்திய கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை நேர அட்வணையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது என்றும் மத்திய கல்வி அமைச்சு வலியுறுத்திக் கூறுகின்றது.

மத்திய கல்வி அமைச்சின் இந்தத் தீர்மானம் குறித்து கவலை வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான எஸ். ஜெயராஜா மாகாண சபையின் நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடாகவே இதனை கருதுவதாக குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற வெப்ப நிலை மே மாதம் 3வது வாரம் வரை நீடிக்கும் என எதிர்பார்கப்படுவதாக வளி மண்டலவியல் தினைக்களம் கூறுகின்றது.

வழமையாக இக் காலப்பகுதியில் அதிகரித்த வெப்ப நிலை காணப்பட்டாலும் இம் முறை சில பிரதேசங்களில் சற்று அதிகமான அகோர வெயில் எறிப்பதாகவும் வளி மண்டலவியல் தினைக்களம் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY