கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் வாழைச்சேனை பாடசாலைகளுக்கு விஜயம்

0
340

(வாழைச்சேனை நிருபர்)

01கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மற்றும் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்திற்கு இன்று (03) விஜயம் மேற்கொண்டார்.

வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்திற்கு தளபாடம் கொள்வனவு செய்வதற்காக தனது மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கான அனுமதிக் கடிதத்தினை அதிபர் என்.எம்.கஸ்ஸாலியிடம் வழங்கியதுடன் தனது ஒரு லட்சம் ரூபா நிதி ஒதுக்;கீட்டில் வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மாணவர்களின் நன்கருதி அமைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிக்கான தரிப்பிடத்தையும் பார்வையிட்டதுடன் பாடசாலைத் தேவைகள் தொடர்பாக அதிபர்களிடம் கேட்டரிந்து கொண்டார்.

07

LEAVE A REPLY