விமலுக்கு எதிராக மீண்டும் இராஜதந்திர கடவுசீட்டு வழக்கு

0
210

Wimal-Weerawansaஇரண்டு வௌிநாட்டு இராஜதந்திர கடவுசீட்டுகளை உபயோகித்து வௌிநாட்டுக்கு செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த வழக்குடன் தொடர்புடைய குற்றப்பத்திரிக்கை விமலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினால் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY