அதிக வெயில் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன

0
103

(வாழைச்சேனை நிருபர்)

403c42f3-9eb1-4e1e-90d4-9b452cf8b0acநாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள 1832 முன்பள்ளிகள் இன்று 03.05.2016 தொடக்கம் எதிர்வரும் 06.05.2016ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளும் மதியம் 12.00 மணியுடன் மூடப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள முன்பள்ளிகள் மூடப்பட்டு காணப்படுவதுடன், பிரதேசத்தில் உள்ள கிழக்கு மாகாணத்திற்குற்பட்ட பாடசாலைகளும் இன்று மதியம் 12.00 மணிக்கு மூடப்பட்டது.

இதே வேளை வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மத்திய அரசாங்கத்தின் நிருவாகத்தின் கீழ் உள்ளதால் தேசிய பாடசாலைகளை மதியம் 12.00 மணிக்கு மூடுவதற்கான அனுமதி வலய கல்வி அலுவலகத்தினால் வழங்கப்படாத காரணத்தினால் நாளை முதல் தேசிய பாடசாலை வழமைபோன்று இயங்கும் என்று அந் நூர் தேசிய பாடசாலை ஒலி பெருக்கி மூலம் மாணவர்களுக்கு அறிவித்தல் விடுத்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.

6a31c260-60b7-44cd-b8da-5f727c8a813d

12d45fad-bb48-4188-a10c-429bab45a138

2454f57f-977b-4241-aa9f-e79f6edd41d5

8123ff2e-41ee-458e-8a1a-f7b03b55e496

66853873-9b2f-4017-85a2-1b0cc7a1c728

e0b83ca2-5d9e-48ca-a8d7-2f565309f89a

LEAVE A REPLY