கென்யாவில் மழையால் கட்டிடம் இடிந்தது: 3 நாட்களுக்குப் பிறகு பெண் குழந்தை உயிருடன் மீட்பு

0
148

201605031816393905_Baby-girl-pulled-out-alive-3-days-after-Kenya-building_SECVPFகென்யாவின் தலைநகர் நைரோபியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து கென்ய செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டன.

இந்நிலையில், கட்டிட சேதங்களில் இருந்து 72 மணிநேரம் கழித்து இன்று காலையில் ஒரு வயது பெண் குழந்தை மீட்கப்பட்டது. அந்த குழந்தையின் பெற்றோர் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை.

இது பற்றி செஞ்சிலுவை சங்க பெண் செய்தித் தொடர்பு அதிகாரி அர்னால்டா ஷியுண்டு செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ‘சிறுமி மீட்கப்பட்டு விட்டாள். நீரிழப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாள். தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்’ என்றார்.

கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு யாரும் உயிருடன் இருப்பதற்கு சாத்தியம் இல்லை எனவும் மீட்பு குழுவினர் இன்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY