(Poem) பாராளுமன்றம்

0
17

(Mohamed Nizous)

‘அடி’- ‘மட்ட’- மக்களின்
‘அழுகு’-ரல் நீக்குமிடம்

‘குடி’ -யரசை ஆளும்
‘கோமா’-ன்கள் உள்ள இடம்

எங்- ‘கள்’ வாழ்க்கையினை
இனிமையான-‘தாக்கு’ மிடம்

எம்பியும் எம்பியும்
எம்பி எம்பி பாயும் இடம்

‘மந்தி’- ரி மார்கள்
எந்திரி எனும் வரை
குந்தித் தூங்குமிடம்

‘வெற்’-றி பெற்றோர்கள்
‘வெற்’-றைக் கூட்டுமிடம்

வெற்றிலைக் காரர்கள்
வெற்றிக்காய் ஏங்குமிடம்

கொம்போடு ஆண்டவரின்
சொம்பு நசிந்து போக
எம்பியாய் ஆன இடம்

சீரான மனிதர்களும்
பாராளுமன்றில்
தாராளம் உள்ளனர்.

LEAVE A REPLY