சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: காத்தான்குடி சிறுவனுக்கு விளக்கமறியல்

0
160

(விஷேட நிருபர், ஏ.எம்.எம். பர்ஸாத்)

Prisoner+in+jail+cell+prison remand

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனை எதிர்வரும் 17.5.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் சிறுமியொருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று (02) திங்கட்கிழமை காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் இன்று மாலை காத்தான்குடி பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இச் சிறுவனை எதிர் வரும் 17.5.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுமியொருவர் காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் ஒன்றுவிட்ட மாமா முறையான சிறுவனினாலே இந்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் அந்த சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் இந்த நிலையில் இந்த சிறுமி துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்;த தகவலையடுத்து விசாரணைகளை மேற் கொண்டுள்ள காத்தான்குடி பொலிசார் சிறுவனை கைது செய்தனர்.

குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY