விரைவில் வெளிவருகிறது Google Trips அப்பிளிக்கேஷன்

0
131

7ae4332eb45af074a6ebc416e0ebf8c8கூகுள் நிறுவனமானது தொழில்நுட்ப ரீதியில் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்து வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக அண்மையில் கூகுள் ஸ்ட்ரீட் வியூவினை 65 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்து வைத்தது.

இதன் மூலம் பயணங்களை இலகுவாக மேற்கொள்ளல், தேவையான நிறுவனங்களின் அமைவிடங்களை அறிந்துகொள்ளல் போன்ற வசதிகள் பயனர்களுக்கு கிடைத்தன.

தற்போது அடுத்தபடியாக Google Trips எனும் புதிய அப்பிளிக்கேஷனை வடிவமைத்துள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் ஆனது பொது ஜன போக்குவரத்து ஊடகங்கள் தொடர்பான தகவல்கள், வரிகள், கார்களுக்கான வாடகைகள், உணவு விடுதிகள் போன்றன தொடர்பான தகவல்களையும் எடுத்துக்காட்டவல்லது.

இது தவிர கடந்த கால மற்றும் எதிர்கால பயணங்கள் தொடர்பான தகவல்களை காட்டக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் ஜிமெயிலில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளை ஸ்கான் செய்து அவர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களையும் சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொள்ளச் செய்யக்கூடிய வசதியினையும் கொண்டுள்ளது.

இதன் பீட்டா பதிப்பானது அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பிளின் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன் வடிவமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

LEAVE A REPLY