சவுதி அரேபியாவில் பின்லேடன் நிறுவனத்தில் இருந்து 77 ஆயிரம் பேர் பணி நீக்கம்

0
143

201605031334313323_Saudi-Binladin-Group-Lays-Off-77000-Workers_SECVPFஅல்கொய்தா  இயக்க தலைவர் பின்லேடன். சவுதி அரேபியாவை சேர்ந்த கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவன். இவனது குடும்ப நிறுவனம் சவுதி அரேபியாவிலும் மற்றும் பல நாடுகளிலும் கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. சவுதி அரேபியாவில் உள்ள இவர்களின் கட்டுமான நிறுவனத்தில் லட்சக்கணக்கான பேர் வேலை பார்க்கின்றனர். சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா ராயல் பிளாக் டவர், ரியாத்தில் உள்ள வைசாலியா டவர் ஆகிய உலகின் பிரபலமான கட்டிடங்களை இந்த நிறுவனம் தான் கட்டிக் கொடுத்துள்ளது.

மெக்காவில் உள்ள மசூதியை விரிவாக்கம் செய்யும் பணியையும் இந்த நிறுவனம் தற்போது செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மெக்காவில் நடந்த பணியின் போது கிரேன் சரிந்து விழுந்ததில் கட்டிடம் இடிந்தது. இடிபாட்டுக்குள் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இதனால் இந்த நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் அரசு தரப்பில் இருந்து வரவேண்டிய பணமும் சரியாக வரவில்லை. இதுமட்டுமல்லாமல் இந்த நிறுவனம் வேறு இடங்களில் அரசு கட்டுமான பணிகளை மேற்கொண்ட வகையில் அதற்கான பணங்களும் வந்து சேரவில்லை. எண்ணெய் விலை குறைந்ததால் சவுதி அரேபியா அரசுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் கட்டுமான நிறுவனங்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் தவிக்கிறது.

இதனால் பின்லேடன் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதனால் 77 ஆயிரம் ஊழியர்களை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதில் இந்தியர்களும் அதிகமாக உள்ளனர். பின்லேடன் நிறுவனம் 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பின்லேடனின் தந்தை இந்த நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார்.

LEAVE A REPLY