ஊடகவியலாளர் படுகொலைகள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
89

cf326891-e6ef-42c2-bf5d-b49126f25bcdபடுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இலங்கையில் நிழவிய யுத்தகால சூழலில் ஏராளமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு இன்று வரை எந்தத்தகவலும் இல்லாமல் உள்ளனர். இதன் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

இந்நாட்டில் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடிய 45 மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களைப் படுகொலைசெய்த குற்றவாளிகளைத் தேடவேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சி அரசுக்கு உள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு, ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக இளைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஊடகவியலாளர்களைக் கடத்துவது, படுகொலை செய்வது என்பன எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும். அவர்களை அரசு பாதுகாக்க வேண்டும். – என்றார்.

LEAVE A REPLY