தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம்

0
254

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

20160502_123902மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று (02) திங்களன்று இடம்பெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அதிபர்கள், தரம் 5 இற்காக கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

20160502_121403இவ் விழிப்புணர்வு செயற்பாட்டில் 2013 ஆண்டு தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் தரம் 5 புலைமப் பரிசில் பரீட்சையின் புள்ளிப் பகுப்பாய்வு முன்வைக்கப்பட்டு எதிர்காலத்தில் மேற் கொள்ளப்பட வேண்டிய சமயோசித கல்வி நடவடிக்கைகள் தெளிவுபடுத்தப்பட்டன.

இதன்போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக ஒரு தொகுதி மாதிரி வினாத்தாள்கள் எஸ்.எம். இராமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆரம்பக் கல்வி துரித அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

20160502_121249

LEAVE A REPLY