எகிப்து அரசை விமர்சித்த 2 பத்திரிகையாளர்கள் கைது

0
116

201605030908011967_Arrested-two-journalists-criticized-the-government-of-Egypt_SECVPFசெங்கடல் பகுதியில் எகிப்து நாட்டுக்கு சொந்தமாக இருந்த 2 தீவுகளை சவுதி அரேபியாவுக்கு வழங்க அதிபர் அப்தெல் பட்டா சிசி முடிவு செய்துள்ளார். இதை எதிர்த்து கடந்த மாதம் 15-ந்தேதி முதல் அங்கு போராட்டங்கள் நடந்து வருகிறது.

எகிப்து அரசின் இந்த முடிவை விமர்சித்து வந்த செய்தியாளர்கள், கெய்ரோவில் இயங்கி வரும் செய்தியாளர் மன்ற அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த மன்ற அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். பின்னர் எதிர்க்கட்சி இணையதளமான பவாபெட் யனயெரில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் உள்பட 2 பத்திரிகையாளர்களை அவர்கள் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எகிப்து அரசின் இந்த செயல் முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கை என அவர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டு உள்ளனர்.

ஆனால் பத்திரிகையாளர் மன்றத்தில் எந்தவித சோதனையும் நடத்தவில்லை எனவும், கைது நடவடிக்கையின் போது பத்திரிகையாளர்களை துன்புறுத்தவில்லை எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY