கிழக்கு மாகாண நூலகப் பணியாளர்கள் கௌரவிப்பு

0
170

(ஏ.எச்.ஏ. ஹு ஸைன்)

கிழக்கு மாகாண நூலகப் பணியாளர்கள் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட நூலகப் பணியாளர்களின் ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும் திங்கட்கிழமை 02.05.2016 மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அங்கத்தவர்களைக் கொண்டு இப் பணியாளர் ஒன்றியம் இயங்கி வருகின்றது. இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 சிரேஷ்ட நூலகர்கள் பொன்னாடை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டதாக ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நூலகர் திருநநாவுக்கரசு சரவணபவன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், அம்பாறை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி உட்பட மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் நூலகர்களும் பங்குபற்றினர்.

4aa8e12f-8908-4ccd-bb53-ce08f1d07bf8

4d1f33e9-50f3-4f87-8df3-43da8d7d6fed

5f98511f-bb88-44e2-aefb-45a99197e46e

81ca0780-8034-4d51-b776-0ee8f6a3fef0

139398e9-1f41-4d9b-9f92-c32d7c232f5b

d833f11e-d66f-4667-b40f-26d159aed9c0

eedf8b9f-8622-4290-b0c5-94150b5666b8

f1af25dc-e32b-4dbc-8e3a-ecb62293acde

LEAVE A REPLY