கிழக்கு மாகாண சபையை தமிழர்களிடம் கையளிக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் வாதிகளின் பொறுப்பாகும்: ஏ.ஜோர்ஜ்பிள்ளை

0
141

(விசேட நிருபர்)

e61706bf-521e-418b-ad46-596fcb6e2e44கிழக்கு மாகாண சபையை தமிழர்களிடம் கையளிக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் வாதிகளின் பொறுப்பாகும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உப செயலாளருமான ஏ.ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.

மட்டக்களப்பில்(1.5.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் கிழக்கு மாகாண ஆட்சியைக் கூட பிடிக்க முடியாதவர்கள் தமிழ் தேசியத்தைப்பற்றி பேச அருகதை இல்லாதவர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் தேசியம் பேசுவதைப்பார்த்தால் அது வேடிக்ககையாக உள்ளது.

எங்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கின்றது. நாங்களும் தமிழர்கள், எங்கள் கண் முன்னாலேயே எமது தமிழ் உறவுகளை பறி கொடுத்தோம். உயிர்களை இழந்தோம் உடமைகளை இழந்தோம். இவற்றையெல்லாம் இழந்தது இந்த கிழக்கு மாகாண ஆட்சியை மாற்றுத்தரப்பினருக்கு கொடுப்பதற்காகவா? இன்று அதைப் பெற்ற தரப்பினர் அதை பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

இன்று கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்கின்றவர்கள் பலத்துடன் ஆட்சி செய்கின்றார்கள் வேலை வாய்ப்புக்களை அபிவிருத்திகள் இடமாற்றங்கள் பதவியுயர்வுகள் இவைகள் எல்லாவற்றையும் அவர்களது சமூகத்திற்கு செய்கின்றார்கள்.

நாங்கள் அதனை தவறு என சொல்லவில்லை. சந்தாப்பத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
யாருக்காக மாகாண சபை ஆட்சி முறை கொண்டு வரப்பட்டது. இந்திய அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்து ஒரு மாகாண ஆட்சியைக் கொடுத்தது தமிழர்களுக்காக அவர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதற்காக ஆனால் இன்று முஸ்லிம்கள் அதை ஆட்சி செய்கின்றார்கள்.

கிழக்கு மாகாண சபையை தமிழர்களிடம் கையளிக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் வாதிகளின் பொறுப்பாகும். எமது தமிழர்களுடைய இழப்புக்கள் எத்;தனை நாங்கள் எவ்வளவை இழந்து நிற்கின்றோம். எமது பொருளாதாரம் கல்வி வளர்ச்சி என்பன இன்று பின்னோக்கிச் செல்கின்றன. பிள்ளையான் எனப்படும் தமிழ் மகன் ஒருவன் கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்யலாம் என்றால் இவ்வளவு சக்தியை வைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆட்சியைக் கைப்பற்றி தமிழ் மக்களுடைய வாழ்வுக்கு விடிவைக் கொண்டுவரமுடியாது.

சிந்தித்துப்பாருங்கள், எமது தமிழ் சமூக சிந்திப்பதில்லை. எதிர் கால சந்ததிகளைப் பற்றி சிந்திப்பதில்லை. அந்த சிந்திக்காத காரணத்தினால்தான் கடந்த தேர்தலில் பிள்ளையானுக்கு வெற்றி வாய்ப்;புக்கிடைக்கவில்லை.அவருக்கு வெற்றி கிடைத்திருந்தால் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்

எமது கட்சி எழுந்து நிற்கின்றது. நாங்கள் அனைத்துக் கூட்டங்களையும் நடாத்தியிருக்கின்றோம். பிள்ளையான் எமது தமிழ் சமூகத்திற்காக செய்த அபிவிருத்தி அளப்பரியது. குறிப்பாக கிராமப்புறங்களில் அவர் செய்த சேவைகள் அதிகம். மகளிரின் வாழ்வதாரத்தை உயர்த்தியுள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு எனும் கல்வி வலயத்தை தனியாக உருவாக்கி படுவான்கரை மக்களின் கல்விக்கு புத்துயிர் ஊட்டியவர் பிள்ளையான் அவர்கள். பிள்ளையானை சிறையில் அடைக்கலாம் ஆனால் எமது கட்சியை சிறையில் அடைக்கமுடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY