மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியில் 20வது தொகுதி புதிய ஆசிரியர் பயிலுனர்கள் வரவேற்கப்பட்டனர்

0
208

(விசேட நிருபர் )

மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியில் 2.5.2016 திங்கட்கிழமை 20வது தொகுதி புதிய ஆசிரியர் பயிலுனர்கள் வரவேற்கப்பட்டனர். இம் மாணவர்களை வரவேற்கும் வைபவம் மட்டக்களப்பு தேசியக் கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்து பீட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி டாக்டர் கே.ரி.சுந்தரேசன் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயபிரதிக் கல்விப்பணிப்பாளர் பி.கோபிந்தராஜா மற்றும் உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் உட்பட உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் உட்பட ஆசிரியர் பயிலுளர்கள் கலந்து கொண்டனர்.

2016 தொடக்கம் 2018ம் கல்வியாண்டுக்காக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் 230 ஆசிரியர் பயிலுனர்கள் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியில் பயிலுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நேற்றைய தினம் 130 புதிய ஆசிரியர் பயிலுனர்கள் தமது வருகையை உறுதிப்பத்தியுள்ளனர். விஞ்ஞானம், தொழிநுட்பம், சித்திரம், வரலாறு, உடற் கல்வி போன்ற பாடங்களுக்கே இப்புதிய ஆசிரிய பயிலுனர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் நிர்வாகத்துக்கான உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.

5f5f130c-3485-4277-909c-8cf1ba27d65c

312fcf96-a886-41da-ae5d-fe9c548ed462

5707ae44-461f-4070-baa4-077d73e2a1de

345772dd-c9ff-4b55-87cc-048dc2104f65

dde15519-c40c-4465-a68a-728a860a7d95

f497bb91-fa57-4291-aeea-f220214b3fbe

LEAVE A REPLY