அம்பாரை இளைஞர் ஊடகப் பேரவை அமைப்பு உதயம்; இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

0
101

Ampara YMFஇளம் ஊடக செயற்பாட்டாளர்களின் ஊடகம் சார் வலுவினை மேம்படுத்தும் நோக்கில் அம்பாரை மாவட்டத்தினை மையப்படுத்தி இளைஞர் ஊடகப் பேரவை Youth Media Forum (YMF) எனும் பெயரில் ஊடகம் மற்றும் இளம் ஊடக செயற்பாட்டாளர்களுக்கான அமைப்பு உதயமாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (30) இரவு மருதமுனையில் நடைபெற்ற இளம் ஊடக செயற்பாட்டாளர்களுக்கிடையேயான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மாணத்திற்கமைவாகவே இளைஞர் ஊடகப் பேரவை உருவாகியுள்ளது.

இதன் போது நிர்வாகத் தெரிவு, செயற்திட்டத் தயாரிப்பு உள்ளிட்ட ஏனைய அமைப்பியல் விடயங்கள் இடம்பெற்றதோடு, எதிர்வரும் காலங்களில் அம்பாரை மாவட்டத்தினை மையப்படுத்தியதாக தேசிய மற்றும் சர்வதேச திட்டங்களை முன்னேடுக்க இருப்பதோடு, நமது இளம் ஊடகவியளார்களுக்கு துறைசார் பயிற்சிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதோடு ஊடகம் சார் தொழில்வாய்ப்புகளையும் ஏற்படுத்துக் கொடுக்கப்படும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், இவ்வமைப்பின் ஊடக இணையவுள்ள இளைஞர்கள் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

பூர்த்தி செய்ய இங்கே சொடுக்குங்கள்

ymfsrilanka@gmail.com

LEAVE A REPLY