கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளுக்கு நாளை முதல் பூட்டு

0
173

(செய்யித் அப்சல்)

locked_out_by_shutter_nubதற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாலர் பாடசாலைகளையும் நாளை (03) செவ்வாய்க் கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தெரிவித்துள்ளார் .

இன்று கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் நன்பகல் போது 12.00 மணியுடன் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து, தற்போது சகல பாலர் பாடசாலைகளையும் 06 ஆம் திகதி வெள்ளிக் கிழமை வரை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY