அடுத்த வருடத்தின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும்: பைஸர் முஸ்தபா

0
182

faiser-musthafaஉள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்கு கால அவகாசம் தேவையென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிடுகின்றார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தௌிவு படுத்தினார்.

ஓகஸ்ட் மாதம் வரையில் நிர்ணய சபைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது எனினும் தற்போது அதனை இன்னும் நீடிக்க வேண்டிய தேவை உள்ளதால் அடுத்த வருடத்தின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் எல்லை நிர்ணய மறுசீரமைப்புக்கு பின்னரே சரியான முறையில் தேர்தலை நடாத்த முடியும் எனவும் மக்களுக்கு சேவையாற்றவே தான் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

#News1st

LEAVE A REPLY