ஹபீபிய்யா 2016 வெற்றிக் கிண்ணத்தை வாழைச்சேனை தட்டிச் சென்றது

0
174

(பி. முஹாஜிரீன்)

P1060962அக்கரைப்பற்று ஹபீபிய்யா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியாக அறபுக் கல்லூரிகளின் கழகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட ‘ஹபீபிய்யா 2016’ வெற்றிக் கிண்ணத்தை வாழைச்சேனை அந்நஹ்ஜா கழகம் கைப்பற்றியது.

கடந்த இரு நாட்களாக நடைபெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை ஹபீபிய்யா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.கே. நழீம் தலைமையில் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கௌரவ அதிதியாகவும், பிரதி சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.எல்.பத்தாஹ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரீ.ஆப்தீன், விளையாட்டுக் கழக சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியில் புத்தளம் அறபுக் கல்லூரியின் லயன்ஸ் கழகம் மூன்றாமிடத்திற்கான கிண்ணத்தையும் 10 ஆயிரம் ரூபா பணப்பரிசையும், அட்டாளைச்சேனை அறேபியன் கழகம் இரண்டாமிடத்திற்கான கிண்ணத்தையும் 25 ஆயிரம் ரூபா பணப்பரிசினையும் வாழைச்சேனை அந்நஹ்ஜா கழகம் ‘ஹபீபிய்யா கிண்ணம் 2016’ சம்பியன் கிண்ணத்தையும் 40 ஆயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டன.

P1060950 P1060951 P1060958

LEAVE A REPLY