அதிபருக்கான பிரியாவிடை வைபவமும், சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்

0
157

(M.T. ஹைதர் அலி)

13077059_10208920253753218_4172498399104023362_nதிருகோணமலை மாவட்டத்தின் சாஹிரா கல்லூரியின் அதிபர் முஹமது அலியின் பிரியாவிடை வைபவமும் க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞன, வர்த்தகம் மற்றும் கலை பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (30) சனிக்கிழமை பாடசாலை திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதீதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான நஜீப் அப்துல் மஜீட், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஆர்.எம். அன்வர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாகிர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அஸ்ரப் மற்றும் திருகோணமலை வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பொற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளால் மாணவர்கள் சான்றிதழ்களும், சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

13087401_10208920173951223_1527510193239796369_n 13124521_10208920177711317_5905425792492965524_n 13133310_10208920181871421_6841219701706745936_n

LEAVE A REPLY