பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களிற்கு உதவித்தொகை கையளிப்பு

0
183

(எம்.ரி.எம்.யூனுஸ்)

DSC_3978-1024x678மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பூநொச்சிமுனை கிராமத்தில் இக்றா வித்தியாலயத்தில் மாணவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் சிறந்ததோர் சாதனையினை நிலைநாட்டினர்.

அம்மாணவர்களை சந்திப்பதற்கும் பாடசாலையின் நிலைமைகளையும் அறிவதற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அன்மையில் விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையடினார்.

இதன்போது விஞ்ஞான துறையில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களின் கல்வி செலவுகளுக்காக மாதாந்தம் 1000.00 ரூபா வீதமும் மற்ற துறைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களின் கல்வி செலவுகளுக்காக மாதாந்தம் 500.00 ரூபா வீதமும் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு வருடத்திற்கு வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

இதற்கமைவாக அன்மையில் மட்/மம/இக்றா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கா.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு உறுதுணையாக அமைந்த ஆசிரியர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வுவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தாம் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக முதற்கட்டமாக க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைக்கான மூன்று மாத உதவித் தொகையை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதற்கான செலவீனத்தையும் மாகாண சபை உறுப்பினர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

DSC_3917-1024x678 DSC_3919-1024x678 DSC_3957-1024x678

LEAVE A REPLY