உஷ்ணமான காலநிலை: கிழக்கு மாகாண பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும்

0
485

Sun_Sky heetஉஷ்ணமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நாளை (03) நண்பகல் 12.00 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமிடம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பணித்துள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது. மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து கற்றலை மேற்கொள்ள முடியாத சிரமமான நிலைமை உள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நன்மை கருதி இதனை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY