ஹெரோயின் மற்றும் கஞ்சா கோப்பி பைக்கற்றுகளை வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது

0
161

(செய்யித் அப்சல்)

arrested2காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஹெரோயின் மற்றும் கஞ்சா கோப்பி பைக்கற்றுகளை வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி. வகாப் தலைமைலான குழுவினரால் ஹிஸ்புல்லாஹ் வீதி, பாலமுனை-02, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மேட்கோள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு சோதனையின் போது 450 மில்லிகிராம் நிறையுடைய 4 ஹெரோயின் பக்கற்றுகளும், 4.350 மில்லிகிராம் நிறையுடைய கஞ்சா கோப்பி பக்கற்றும் கைப்பற்றப்பட்டதுடன் 19 வயதான இளைஞர ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக நடவடிக்கைகளின் பொருட்டு கைது செய்யப்பட்ட இளைஞர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஏற்கனவே, கஞ்சா மற்றும் கேரளா கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 02 முறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY