கட்டாரில் ஜனூஸின் நூல் அறிமுகம்

0
162

( எம்.எஸ்.எம்.சாஹிர்)

596e2142-4c80-458c-a17b-993d36d8e34aஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பளரும் கவிஞருமான எஸ்.ஜனூஸ் எழுதிய “மூசாப்பும் ஒரு முழ வெயிலும்” கவிதை நூல் வெளியீட்டு விழாவும் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல் நிகழ்வும் கட்டார் நாட்டில் எதிர்வரும் 05.05.2016 வியாழன் மாலை 6.00 மணிக்கு மிட் மக் சுற்று வட்டத்துக்கருகில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொறியியலாளர் அபூதாலிப் எம்.றிஸாட் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் நாபீர் பௌண்டேசன் மற்றும் ETM (PVT) LTD இன் முகாமைத்துவப் பணிப்பாளர் நாபீர் உதுமான்கண்டு பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதுடன் சிறப்பு அதிதியாக சிரேஷ்ட மதிப்பீட்டு அளவையாளர் எம்.எஸ்.எம். முனாஸ் கலந்து கொள்கிறார். இந்நிகழ்வுக்கு கட்டார் நாட்டில் பணி புரியும் தமிழ் பேசுகின்ற உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

LEAVE A REPLY