(Photo Update) சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: காத்தான்குடி சிறுவன் கைது

0
29

(விசேட நிருபர்)

521851f5-b697-4d61-b3bb-fa1c5186a7c7காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் சிறுமியொருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் இன்று திங்கட்கிழமை (02) காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுமியொருவர் காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் ஒன்றுவிட்ட மாமா முறையான சிறுவனினாலேயே இந்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் அந்த சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் இந்த நிலையில் இந்த சிறுமி இன்று காலையில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிசார் சிறுவனை கைது செய்துள்ளதுடன், தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற பொலிஸ் குற்றவியல் தடவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

2df63266-42e6-4933-a54a-6df68071f3d1

7f60b71a-6928-4310-9e6c-e8e6384e3d82

736f9d77-51f3-43a0-a43c-2eace6877164

521851f5-b697-4d61-b3bb-fa1c5186a7c7

baf4e8e7-ba88-41ae-971d-54d83757a27e

f436b972-1aef-42e0-a38f-2534ac731fe3

LEAVE A REPLY