சுவையான சிக்கன் ரோல் செய்வது எப்படி

0
351

தேவையான பொருட்கள் :

சிக்கன் (எலும்பு இல்லாதது) – 300 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிது
மைதா மாவு அல்லது கோதுமை மாவு – தேவையான அளவு
புதினா சட்னி – தேவையான அளவு

செய்முறை :

* சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

* மைதா மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து சப்பாத்தியாக தேய்த்து சுட்டு வைத்துக் கொள்ளவும்.

* சுத்தம் செய்த சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு வதக்கவும்.

* சிக்கன் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள, சாட் மசாலா, தனியா தூள், சீரக தூள் எல்லாவற்றையும் போட்டு பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.

* சிக்கன் நன்கு வெந்ததும் அதன் மேல் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி வைக்கவும்.

* சப்பாத்தியின் மேல் புதினா சட்னியை தடவி அதன் மேல் வதக்கி வைத்திருக்கும் சிக்கனை வைத்து சப்பாத்தியை அப்படியே ரோலாக சுருட்டவும்.

* இதைப் போலவே பச்சை சட்னிக்கு பதிலாக மயோனீஸ் தடவியும் சுருட்டி வைக்கலாம்.

* சுவையான, எளிதில் செய்யக் கூடிய சிக்கன் ரோல் தயார்.

LEAVE A REPLY