மேற்கு இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 அலகாக பதிவு

0
148

201605021213160224_Earthquake-of-61-Magnitude-Hits-Western-Indonesia_SECVPFசுமத்ரா தீவில் உள்ள மேற்கு லாம்புங் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனிசியா வானியல் மற்றும் புவி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசுபிக் பெருங்கடலை சுற்றிலும் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக நிலநடுக்க ஏற்பட்டு வருகிறது. முன்னதாக தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியிலும், மெக்ஸிகோவை ஒட்டிய சில பகுதிகளிலும், சில தினங்களுக்கு முன்பு வானுவட்டு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று மேற்கு இந்தோனிசியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY