ஈக்வடார் பூகம்பம்: 2 வாரத்துக்கு பிறகு முதியவர் உயிருடன் மீட்பு

0
82

201605021316191808_72-year-old-rescued-2-weeks-after-Ecuador-quake_SECVPFமத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 660 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

அங்கு மீட்பு பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈக்வடார் நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் மீட்பு படைகள் வந்துள்ளன. அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து வந்த மீட்பு படையினர் மனாபி நகரில் மீட்பு பணிகளை செய்து வந்தனர்.
அப்போது ஒரு கட்டிட இடிபாட்டுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டது. உடனே இடிபாடுகளை அகற்றினார்கள். அங்கு 72 வயது முதியவர் ஒருவர் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டனர். 2 வாரங்களுக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது பெயர் மானுவேல் வஸ்கிஸ். அவருடைய கால் விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.

ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய சிறுநீரகம் செயல்பாடு மோசமாக உள்ளது. உடலில் நீர்சத்து வற்றியதால் பல பாகங்கள் பாதிப்படைந்துள்ளன. எனவே அவரை காப்பாற்றுவதற்கு டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.

LEAVE A REPLY