மட்டக்களப்பில் எல்ரீரீஈ இயக்க முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கைது

0
16

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

arrestedஎல்ரீரீஈ அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வு பொறுப்பாளரான பிரபா எனப்படும் கலைநேசன், இன்று (02) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னிப்பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட கலைநேசன், புனர்வாழ்வளிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு இன்று சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மேலதிக விசாரணைகளுக்காக கல்முனைக்கு கொண்டு அங்கிருந்து கொழும்பு பயங்கரவாத நடிவடிக்கைகள் விசாரணைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY