சிறுமிக்கு சூடு: மே 5 வரை விளக்கமறியல் நீடிப்பு

0
146

(அப்துல்லாஹ்)

court judgementsமட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் மே மாதம் 05ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (02) திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகிய இருவரையும் மே மாதம் 05ம் திகதி வரை மீண்டும் 03 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

தரம் 5இல் கல்வி கற்கும் 10 வயது சிறுமி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரினால் சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY