20 பந்துகளில் சதம் அடித்து கெயிலின் சாதனையை முறியடித்த இளம் வீரர்

0
93

imageவெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த டிரினாட் டொபாக்கோ கிரிக்கெட் வாரியம் நடத்திய உள்ளூர் 20 ஓவர் போட்டியில் 23 வயதான இராக் தாமஸ் என்பவர் பங்கேற்று விளையாடினார்.

இந்த தொடரில் மேசன் ஹால் அணிக்காக ஆடிய இராக் தாமஸ் 21 பந்துகளில் சதமடித்து உலகச் சாதனை படைத்துள்ளார். 31 பந்துகளைச் சந்தித்த அவர் 14 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 131 ஓட்டங்கள் குவித்தார்.

இதனால் ஸ்பேசைட் அணி நிர்ணயித்த 157 ஓட்டங்கள் இலக்கை வெறும் 8 ஓவர்களில் மேசன் ஹால் அணி எட்டி அபார வெற்றி பெற்றது.

20 ஓவர் போட்டிகளில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 30 பந்துகளில் கிறிஸ் கெய்ல் அடித்த சதமே உலகச்சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை இராக் தாமஸ் முறியடித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY