ஜம்இய்யத்துஷ் ஷபாப் நிறுவனத்தின் இலவச கண் சத்திர சிகிச்சை மிகவும் பாராட்டத்தக்கதாகும்: சிப்லி பாறுக்

0
181

(M.T. ஹைதர் அலி)

5cbda2e0-7af2-4bf2-bb31-47596c6a4e8bஜம்இய்யத்துஷ் ஷபாப் நிறுவனத்தினால் ஆற்றப்படுகின்ற சேவைகள் பல்லாயிரம் அதிலும் குறிப்பாக வசதியற்ற நபர்களுக்கு இலவச கண் சத்திர சிகிச்சையினை மேற்கொள்வது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விடயமாகும் என மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.

சுமார் 500 நபர்களுக்கு கிழக்கு மாகாணம் தழுவியதாக நடைபெற்ற இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெற்று வருகின்றது. அதனை பார்வையிடுவதற்காகவும் நேரில் சென்று தனது வாழத்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதற்காக காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு 01.05.2016ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) சென்றிருந்தார்.

அதன்போது ஜம்இய்யத்துஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரனையில் நடைபெற்ற, கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 75,000.00 ரூபா செலவாகும் கண் சத்திர சிகிச்சையை இலவசமாக வழங்கும் ஷபாபின் சேவையினை பாராட்டி அதன் நிருவாகிகளுக்கும் பாகிஸ்தான், சஊதி நாட்டிலிருந்து வந்திருந்த சத்திர சிகிச்சை நிபுனர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஜம்இய்யத்துஷ் ஷபாப் நிறுவனத்தினால் ஆற்றப்படுகின்ற சேவையானது தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் பயன்பெறத்தக்க வகையில் சேவையாற்றுகின்றமை பெரிதும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும் தற்போது நடைபெற்று முடிந்த சத்திரசிகிச்சை முகாமில் 100 இற்கும் அதிகமான தமிழ் சிங்கள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அத்தோடு காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், அபிவிருத்தி குழுவினர் மற்றும் ஊழியர்கள் என்று அனைவரும் இவ்விடயம் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இன மத பேதங்களை மறந்து இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு சமூகங்களும் பயன்பெறக்கூடிய வகையில் இச்சேவை நடைபெறுகின்றன. இப்படியான விடயங்கள் இன ஐக்கியத்திற்கும் இன ஒற்றுமைக்கும் ஓர் முன்மாதிரியாக நோக்கலாம் என தெரிவித்தார்.

24e3cb4c-ba30-4b52-a647-550a623a67fd 15903e94-86c0-4bf5-bc5c-fda2a457b01f a6c9bf3b-2d7e-4744-a781-090162b477e4 b0d704e8-0768-4079-887a-3754a97b30a6 cfd6202a-1049-45a2-8de5-d5e1ae642d05

LEAVE A REPLY