பிரதி அமைச்சரின் முயற்சியினால் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு

0
254

(வாழைச்சேனை நிருபர்)

03மட்டு – வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகள் எதிர்நோக்கி வந்த நீர் பிரச்சினைக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் முயற்சியினால் தீர்வு கிடைத்தது.

வாகனேரி நீர்ப்பாசத்திட்டத்தின் கீழ் 8245 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவாசாயிகள் தங்களது வயல்களுக்கு சிறுபோகம் 2016 திட்டத்தில் வயல் செய்வதற்கு வழங்கப்பட்ட நீர் போதாமையினால் வேலான்மை அழிந்து போகும் நிலையில் உள்ளதாகவும் நீர்ப்பாச திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு எங்கள் விவசாயத்திற்குரிய நீரைப்பெற்றுத் தருமாறும் விவசாய அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோலையடுத்தே விவசாயிகளுக்கு நீர் வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் தலைமையில் வாகனேரி நீர்ப்பாசத்திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் நீர்ப்பாச திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் பிரதி அமைச்சரின் இல்லத்தில் நேற்று இடம் பெற்ற போதே நாளை (02) திங்கள் கிழமை மாதுரு ஓயா குளத்தில் இருந்து விவசாயிகளுக்கான நீரைப் பெற்றுத்தருவதாக நீர்ப்பாச திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதன் போது விவசாயிகள் மாதுரு ஓயா நீர் திறந்து விடும் சந்தர்ப்பத்தில் நீரை மறித்து இடையூரு செய்வதில்லை என்றும் சகல வயல்களுக்கும் நீர் கிடைப்பதற்கு விவசாய அமைப்புக்கள் உதவி n சய்யவதாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

05 07

LEAVE A REPLY