காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகளின் மே தின நிகழ்வு: அப்துர் ரஹ்மான் விஷேட விருந்தினர்

0
209

(NFGG ஊடகப்பிரிவு)

IMG-20160501-WA0047காத்தான்குடிப் பிரதேசத்தில் ஒரு சிறந்த கட்டமைப்புடன் இயங்கி வரும் தொழிற்சங்கமான முற்சக்கரவண்டி ஓட்டுனர்களின் சங்கமானது, இன்றைய மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தியது. அதில் முதற்கட்டமாக முற்சக்கர வண்டிகள் கலந்து கொண்ட ஊர்வலம் ஒன்று காத்தான்குடி பொலீஸ் நிலையம் முன்பாக ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து தமது சங்கத்தினர்களுக்கான மே தினக்கூட்டமொன்றினை இத்தொழிற்சங்கம் காத்தான்குடிக் கடற்கரையில் நடாத்தியது. இவ்விரு நிகழ்வுகளிலும் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் விஷேட விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததோடு உரை ஒன்றினையும் ஆற்றினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட், சமூக மேம்பாட்டிற்கான ஒன்றியத்தின் பணிப்பாளர் இல்மி அஹமட் லெப்பை ஆகியோர்களும் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர். அத்துடன் இத்தொழிற்சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

IMG-20160501-WA0037 IMG-20160501-WA0038 IMG-20160501-WA0041 IMG-20160501-WA0042 IMG-20160501-WA0043 IMG-20160501-WA0045 IMG-20160501-WA0048 IMG-20160501-WA0049

LEAVE A REPLY