‘விளையாட்டு வினையானது’; செல்ஃபி எடுக்கப்போய் தலையில் சுட்டுக்கொண்ட சிறுவன்

0
171

imageஇந்தியாவின் வடக்கே, பஞ்சாப் மாநிலத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவன், அவனது தந்தையின் கைத்துப்பாக்கியை தனது தலையில் வைத்தவாறு ‘செல்ஃபி’ எடுக்க முயன்றபோது தவறுதலாக தன்னைத் தானே சுட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

அந்த 15-வயது பையனுக்கு, பத்தான்கோட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

கடந்த வெள்ளியன்று மாலை, தனது தந்தை உரிமம் வைத்திருக்கின்ற துப்பாக்கியை வைத்து அந்த பள்ளிச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ள போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பையனின் நிலைமை மோசமாக இல்லை என்று கூறப்படுகின்றது. சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம், பின்னால் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது அதன் முன்பாக செல்ஃபி எடுக்க முயன்ற பதின்ம வயது இளைஞன் ஒருவன் ரயில் மோதி உயிரிழந்தான்.

உலகெங்கிலும் 2015-ம் ஆண்டில் நடந்த, செல்ஃபியுடன் தொடர்புடைய மரணங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை இந்தியாவிலேயே நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பிபிஸி-

LEAVE A REPLY