கென்யாவில் கன மழை: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

0
177

imageகடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த மழையினால் அங்கு பல கட்டிடங்கள் இடிந்தன.

தலைநகர் நைரோபியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். போலீசார், தீயணைப்பு படையினர், பாதுகாப்பு படையினர் என பல தரப்பினரும் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் 121 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை நைரோபி துணை கவர்னர் ஜோனத்தான் நேற்று நேரில் பார்வையிட்டார். கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என அவர் அறிவித்தார். இதேபோன்று மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி மேலும் 7 பேர் பலியாகினர்.

LEAVE A REPLY