அமெரிக்காவின் பெருவெள்ளம்: 4 பேரக் குழந்தைகளுடன் மூதாட்டி பலியான சோகம்

0
110

imageஅமெரிக்காவின் டெக்சாஸ், மிசிசிப்பி, நியூ ஆர்லியேன்ஸ், லூய்சியானா போன்ற பகுதிகளில் இன்று இடி,மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக, டெக்சாஸ் மாநிலத்தில் இடைவிடாது பெய்த மழையின் விளைவாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இங்கு ஒருமணி நேரத்துக்குள் 19 சென்ட்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது.

இதனால், இங்குள்ள பலஸ்டைன் பகுதியில் பல வீடுகளின் கூரைமட்டத்துக்கு வெள்ளநீர் சூழ்ந்தது. அங்குள்ள ஒருவீட்டில் தனது பேரக்குழந்தைகளுடன் தனியாக இருந்த ஒரு மூதாட்டி, குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் நோக்கத்தில் வெளியே வந்தார். அப்போது, பாய்ந்தோடிவந்த வெள்ளம் அவர்களை அடித்துச் சென்றது.

இதில், நீரில் மூழ்கி, மூச்சுத்திணறிய மூதாட்டி லென்டா ஆஸ்பெர்ரி(64), மற்றும் அவரது பேரக்குழந்தைகள் வென்ட்டியா ஆஸ்பெர்ரி(9), டேவோன்ட்டே ஆஸ்பெர்ரி(8), வான் ஜான்சன் ஜூனியர்(7), ஜமோனிக்கா ஜான்சன்(6) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதே பகுதியை சேர்ந்த கியோவானி ஒலிவாஸ்(30) என்பவரும் நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி பலியானார்.

LEAVE A REPLY