காங்கேயனோடையில் இரத்தான முகாம்

0
215

(எம்.ரி.எம்.யூனுஸ்)

IMG-20160501-WA0035-1024x768காங்கேயனோடை பிர்லியன்ட் சமூக சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் காங்கேயனோடை அல் அக்ஸா பாடசாலை மண்டபத்தில் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் காத்தான்குடி தள வைத்தியசாலையுடன் இணைந்து இரத்த நன்கொடையாளர்களிடமிருந்து இரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

பிர்லியன்ட் சமூக சேவைகள் ஒன்றியத்தின் தலைவர் ஏ.டபுல்யூ.எம்.றூமி தலைமையில் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வில் ஒன்றிய அங்கத்தவர்களும் பொதுமக்களுமாக சுமார் 50 பேர் இரத்தத்தை தானமாக வழங்கி வைத்தனர்.

வைத்திய பரிசோதனையை காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எம்.எம்.அயாஸ் மேற்கொண்டார்.

IMG-20160501-WA0011-1024x768 IMG-20160501-WA0032-1024x768 IMG-20160501-WA0034-1024x768

LEAVE A REPLY