பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு

0
150

Pakistan-Cricket-team3மிஸ்பா உட்பட சில அனுபவம் மிக்க வீரர்களை இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டேம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் ‘ஏ’ அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் ஏ அணியினருடன் சேர்ந்து விளையாட பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் மிஸ்பா, அசார் அலி உட்பட சில வீரர்கள் விரும்பியுள்ளனர்.

மேலும், தங்களை இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அனுமதிக்கும் படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரியுள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஷார்யார் கான், தலைமை தேர்வுக்குழு அதிகாரியான இன்சமாம்-உல்-ஹக்-யிடம் கலந்துரையாடியுள்ளார்.

அனுபவம் மிக்க வீரர்கள், ‘ஏ’ அணியினருடன் சோ்ந்து விளையாடுவது நியாயமற்ற முறையாக இருக்கும், வளரும் வீரர்கள் இதை மோசமானதாக உணருவார்கள் என கூறி அனுபவமிக்க வீரர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY