தந்தையின் நினைவாக நம்பர் 18-ஐ பயன்படுத்தும் விராட் கோலி

0
95

201605010511191167_Here-is-why-Virat-Kohli-has-chosen-18-as-his-jersey-number_SECVPFவீராட் கோலி தனது தந்தையின் நினைவாக ஜெர்சி நம்பர் “18” பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் ஜெர்சியில் ஒரு ‘நம்பர்’ எழுதப்பட்டிருக்கும். இதை தங்களது ராசி, ஏதாவது ஒரு நினைவாக அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவர் விராட் கோலி தனது ஜெர்சி நம்பர் “18” என்ற நம்பர் போட்டுள்ளதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அவர் தனது தந்தையின் நினைவாகவே அந்த நம்பரை பயன்படுத்தி வருகிறார்.

கோலிக்கு “18” வயது இருக்கும் போது அவரது தந்தை 2006ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, மரணமடைந்தார். இது கோலியை அதிகம் பாதித்தது. இதையடுத்து “அண்டர்-19” போட்டிகளில் இருந்தே “18” என ஜெர்சி நம்பரை பயன்படுத்த தொடங்கினார்.

நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே தனது தந்தையின் கனவாக இருந்ததாக கூறும் கோலி, தற்போது அதை பார்க்க அவர் உயிருடன் இல்லை என்று அடிக்கடி கவலையுடன் தெரிவிப்பார்.

LEAVE A REPLY