வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரினால் மூன்றாவது போதைப்பொருள் மாத்திரை குழு சுற்றிவளைப்பு

0
168

(எம்.எச்.எம். நௌபல்)

imageமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் 2016.04.29ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) ஓட்டமாவடி புகாரி ஆலிம் வீதியில் வைத்து ஒருவரும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் வைத்தும் இன்னொருவருமாக ‘நிரோவன் 150 mg எனும் போதை மாத்திரைகளுடன் மீண்டும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீராவோடை பிரதேசத்தை சேர்ந்தவரும் தற்போது தாண்டியடி சேவிஸ் சென்றர் வீதியில் வசிப்பவருமான அன்வர் முகம்மட் சிபான் என்பவரும், பிறைந்துரைச்சேனை மஜீத் மெளலவி வீதியைச் சேர்ந்த முஹம்மது சாபி முஹம்மது ரியாஸ் (படத்தில் காணப்படுபவர்) என்ற இருவருமே கைது செய்யப்பட்டவர்களாகும்.

கைது செய்யப்பட்ட இருவரையும் 2016.04.30ஆந்திகதி (சனிக்கிழமை – இன்று) வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மிகவும் சூட்சமமான முறையில் மேற்கொண்ட இந்த சுற்றி வளைப்பினை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புக்கு பொறுப்பான உப பொலிஸ் அட்சியட்சகர் அமீர் அலி அவர்களின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜுனைட் மற்றும் இஸ்மாயில் ஆகியோர் மேற்கொண்டனர்.

அத்தோடு, கடந்த 2016.04.19ஆந்திகதி (செவ்வாய்கிழமை) 2000 போதைப்பொருள் மாத்திரைகளுடன் இரு இளைஞர்களும் 2016.04.23ஆஆந்திகதி (சனிக்கிழமை) ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வைத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தகக்தாகும்.

குருகிய காலப்பகுதிக்குள் இதுவரை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனைப் பிரதேசத்தில் மே மாதத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ள மூன்றாவது சுற்றி வளைப்பு இதுவாகும்.

LEAVE A REPLY