புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கான நூலக கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வு.

0
159

(எம்.ரி.எம்.யூனுஸ்)

c4b9e19f-586a-48dd-a440-8a05251abf40மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் அமைக்கப்படவிருக்கின்ற புதிய வாசிகசாலைக்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வு மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவருமான அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் இன்று 30.04.2016. சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய வாசிகசாலை 365 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் வாசிகசாலை 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்களின் பாவனைகளுக்காக திறந்து வைக்கப்படும் என்றும் சுமார் 3000 மாணவர்கள் இருந்து தங்களுடைய நூலக வசதிகளையும் ஏனைய பல்கலைக்கழகம் தொடர்பான அறிவையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் புதிய தொழில்நுட்பத்திற்கமைவாக சர்வதேச பல்கலைக்கழகங்களோடு இணைந்து படிக்கக் கூடிய வகையிலுமான தொழில்நுட்பங்களுக்கமைவாக நான்கு மாடிகளைக் கொண்ட நவீன கட்டடக்கலையிலே அமைக்கப்படும் என்று மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஹமட் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் ஆளுனர் சபை உறுப்பினர் டாக்டர் பிரபாத் உக்குவத்த அவர்களும் மற்றும் பொறியியலாளர்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

5984d57e-3a0b-4929-857e-f5c72f0362fe

a003cd19-0969-4ad6-8aa6-c98f74259f16

LEAVE A REPLY