சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவில் இருந்து தப்பிக்கலாம்

0
95

201604301253363804_Escape-from-diabetes-if-you-eat-chocolate_SECVPFஅதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற தகவல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தினமும் சாக்லேட் சாப்பிடுபவர்களை நீரிழிவு நோய் அண்டாது. அவர்களை விட்டு விலகி ஓடிவிடும் என்ற நல்ல தகவலும் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 18 முதல் 69 வயது வரையிலான 1,153 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி தினமும் 100 கிராம் அளவுக்கு அதாவது ஒரு பார் அளவுக்கு சாக்லேட் சாப்பிடுபவர்களை நீரிழிவு நோய் மற்றும் இதய ரத்த நாள நோய்கள் தாக்காது என கண்டறியப்பட்டது.

சாக்லேட் சாப்பிடுவதால் இன்சுலின் அதிக அளவு உற்பத்தி ஆவதை தடுக்கிறது. கல்லீரல் என்சைம் உற்பத்தியை பெருக்குகிறது. இதனால் தினமும் சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தினமும் 24.8 கிராம் அளவுக்கு சாக்லேட் சாப்பிடுவது தெரிய வந்தது. அதே நேரத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அதிக அளவில் சாக்லேட் சாப்பிடுவதும், அதனால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவதும், உடல் திறனில் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY