நான் அதிபரானால் பின்லேடனின் இருப்பிடம் பற்றி தெரிவித்தவரை விடுதலை செய்வேன்: டொனால்ட் டிரம்ப்

0
192

201604301333278267_Donald-Trump-claims-to-free-Pakistani-doctor-who-helped-the_SECVPFஅமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் பற்றி அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் அளித்ததற்காக பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டாக்டரை இரண்டே நிமிடத்தில் சிறையில் இருந்து விடுதலை செய்வேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.

சர்வதேச தீவிரவாதியான அல் கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க சீல் படையினர் நடத்திய அதிரடி ஆபரேஷனில் பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டான். பின்லேடன் அங்கு தங்கி இருப்பதை பலமுறை உளவுப் பார்த்த பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஷகீல் அப்ரிடி என்பவர் அமெரிக்க உளவுப்படைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ஜெரோமிக்கா’ மூலமாகதான் அவனை தீர்த்துகட்ட அமெரிக்காவால் முடிந்தது என நம்பப்படுகிறது.

டாக்டர் அப்ரிடிமீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்துள்ள பாகிஸ்தான் அரசு அவரை சுமார் ஐந்தாண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் பற்றி அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் அளித்ததற்காக பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டாக்டரை இரண்டே நிமிடத்தில் சிறையில் இருந்து விடுதலை செய்வேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.

பிரபல செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், நாம் பாகிஸ்தானுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறோம். ஏராளமான பணத்தை தந்துள்ளோம். ஆனால், நமது நாட்டின் அதிபர்மீது அவர்களுக்கு சிறிதுகூட மரியாதை இல்லை. ஆனால், அவர்கள் நமது நண்பர்களாக தங்களை காட்டிக் கொண்டு அட்டைபூச்சியைப் போல நம்மிடம் இருந்து நிதி மற்றும் ராணுவ உதவிகளை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு கைமாறாக நமக்கு அவர்கள் எதுவுமே செய்வதில்லை.

அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் பற்றி அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் அளித்ததற்காக பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டாக்டரை இரண்டே நிமிடத்தில் சிறையில் இருந்து விடுதலை செய்வேன் என அந்த பேட்டியின்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY