மாகாண முதலமைச்சர் மீது ஏறாவூர் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்

0
145

(இக்பால் எம் பிஹாம்)

13124705_1753010864922203_6036156083417866265_nஏறாவூர் மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகளை கிழக்கு மாகாண முதலமைச்சரினால் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும் அதனால் முதலமைச்சர் மீது ஏறாவூர் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் நிதியொதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் அல் – ஜிப்ரியா வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அவர்களின் ஏறாவூர் வருகையின் போது அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வுகளில் ஏறாவூர் மக்கள் கலந்துகொள்ளவில்லை மாறாக வெளி ஊர்களில் இருந்து தமிழர்களும் சிங்களவர்களும் இறக்குமதி செய்யப்பட்டதுடன் கிழக்கிலுள்ள உள்ளுராட்சி ஊழியர்களை வலுக்கட்டாயப்படுத்தியும் வேலையற்ற பட்டதாரிகளும் ஆர்ப்பாட்டம் செய்த தொண்டர் ஆசிரியர்களும் நிரந்தர நியமனம் கோரிய தொண்டர் ஊழியர்களுக்கும் பொய் வாக்குறுதி வழங்கி அழைத்து வரப்பட்டே குறித்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வினை ஏறாவூர் மக்கள் புறக்கனித்தமைக்கான காரணம் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது அதிகாரத்தின் மூலம் ஏறாவூர் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்ய முடியாமல் போனமையேயாகும். குறிப்பாக முதலமைச்சர் தனது கட்சியினுடைய தவிசாளரும் முன்னால் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா போன்றோரை ஓரங்கட்டி செயற்படுவதுமேயாகும்.

எமது நாட்டின் ஜனாதிபதி எங்களுடைய பிரதேச நிகழ்வொன்றில் கலந்து கொள்வது எமது பிரதேசத்தினுடைய அபிவிருத்திற்கான அத்திவாரமாகும் அது வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வாகவே கருதப்படும். இவ்வாறானதொரு நிகழ்வில் நமது பிரதேச மக்களும் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

13083343_1753011048255518_2431726217368050620_nஏறாவூர் மண்ணுக்கு பல்வேறு பணிகளை செய்தவர்களையும் குறிப்பாக என்னையும் அரசியலிலிருந்து ஓரங்கட்டிவிட்டு தனிக்காட்டு ராஜாவாக இப்பிரதேசத்திலே திகழ வேண்டுமென்பதே அவருடைய ஒரே இலக்கு இதற்காக ஒரு அரசியல் சுத்திகரிப்பு நடவடிக்கையில் இறங்கி தனது அரசியலை இழக்கும் ஒரு நிலைக்கு முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளார்.

நான் மாகாண சபை அதிகாரத்திலிருந்த காலப்பகுதியில் ஏறாவூர் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தடயங்களை நிறைவேற்றிக் கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன.; குறிப்பாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை, மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை, சுகாhர காரியாலயம், கால்நடை வைத்தியசாலை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மற்றும் உறுகாமம் மீள் குடியேற்றம் என என்னாலான பணிகளை ஏறாவூர் மக்களுக்காக செய்து முடித்துள்ளேன் இதனை ஏறாவூர் மக்கள் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அதுமட்டுமல்லாமல் எமது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காக அதிகாரிகளோடு இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தேன்.

தாங்கள் எமது பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் சிந்தித்து செயற்பட்டதன் மூலம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 2011, 2012, 2013 ஆகிய வருடங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு தேசிய தரப்படுத்தலில் முதலிடத்தை வகித்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று எமது கல்வி வலயம் 7வது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தளவிலான மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். இது மிகவும் கவலையான விடயமாகும்.

கிழக்கு மாகாணத்திலே உச்ச அதிகாரத்திலிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏறாவூர் பிரதேசத்தினுடைய கல்வி அபிவிருத்தி விடயத்தில் சிறிதளவேனும் அக்கரை செலுத்தியதுண்டா? இப்பிரதேசத்தினுடைய கல்வி வீழ்ச்சிக்கு யார் காரணம் இவ்வாறான முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தாமல் முதலமைச்சர் தனது வியாபாரத்தினை விருத்தி செய்வதிலே அக்கரையாக செயற்படுகிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY