சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிக்க தடை

0
85

staticmapகூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நாரஹேன்பிட்டியிலுள்ள சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் நாராஹென்பிட்ட சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

நேற்று  முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மே தின ஊர்வலங்களை நடத்துவதற்கும் அவற்றினை ஏற்பாடு செய்வதற்காகவும் சாலிகா விளையாட்டரங்கிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஏற்பாட்டாளர்கள், உதவியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தனவினால் நாராஹென்பிட்ட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் நீதிமன்றத்திடம் இந்த தடை உத்தரவை கோரியிருந்தனர்.

LEAVE A REPLY