முன்னாள் புலிப் போராளிகள் இனி கைது செய்யப்படமாட்டார்கள் – சுமந்திரன்

0
91

sumanthiran-575-01 (1)புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீண்டும் கைது செய்யமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை(29) யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் அரசாங்கத்தைச் சந்தித்தமையால் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் எந்த கைதுகளும் இடம்பெறவில்லை.
சந்தேககத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்படலாம். ஆனால் அதற்குரிய காரணம், கைது செய்யப்படுவர்களின் உறவினர்களுக்கு எழுத்து வடிவில் வழங்கப்பட வேண்டும். மீண்டும் இங்கு கடத்தல்கள் இடம்பெறுவதை ஏற்கமுடியாது என்றார்.

LEAVE A REPLY