புகையிரத்தில் மோதி குடும்பப் பெண் மரணம்

0
231

(வாழைச்சேனை நிருபர்)

3மட்டக்களப்பில் இருந்து இன்று (30) காலை 06.10க்கு கொழும்பு நோக்கி புறப்பட்ட உதயதேவி புகையிரதத்தில் குடும்பப் பெண் ஒருவர் மோதுண்டு உயிர் இழந்த சம்பம் நிகழ்ந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் தெரிவித்தனர்.

ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கும் இடையில் தேவபுரம் பகுதியில் வைத்தே குறித்த குடும்பப் பெண் மோதுண்ட நிலையில் புகையிரத நிலைய ஊழியர்களால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த பெண் மாவடிவேம்பு கிராம அபிவிருத்தி சங்க வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான கணபதிபிள்ளை ரன்சிதமலர் (வயது – 35) என்று அடையாளங்காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4 7 8

LEAVE A REPLY