இலங்கை முஸ்லிம் பெண் ஆஸியில் நீதிபதியானார்

0
188

Urfa Mashoodஅவுஸ்­தி­ரே­லிய நாட்டின் விக்­டோ­ரியா நீதி­மன்றம் வர­லாற்றில் முதன் முத­லாக முஸ்லிம் பெண் ஒரு­வரை நீதி­ப­தி­யாக நிய­மித்­துள்­ளது.

அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளவர் இலங்­கையைப் பூர்­வீ­க­மாகக் கொண்ட உர்பா மசூத் என்­ப­வ­ராவார்.

அட்­ரோனி ஜெனரல் மார்டின் பக்­கூலா கடந்த செவ்வாய்க் கிழமை காலை உர்பா மசூதை விக்­டோ­ரியா நீதி­மன்ற நீதி­ப­தி­யாக நிய­மனம் செய்து அறிவித்தார்.

இலங்­கையின் கல்­ஹின்ன பிர­தே­சத்தை பூர்­வீக பின்­ன­ணி­யாகக் கொண்ட உர்பா மசூத் விக்­டோ­ரியா நீதி­மன்­றத்தின் முதல் பெண் நீதி­பதி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

உர்பா மசூட் தனது குற்­ற­வியல் சட்டம் தொடர்­பான பயிற்­சியை 2003 இல் ஆரம்­பித்தார். அத்­துடன் அவர் அவுஸ்தி­ரே­லியா வரி மற்றும் பூவீக சட்­ட­சேவை காரி­யா­ல­யத்தில் கட­மை­யாற்­றி­யுள்ளார். அவர் 2012 இல் சட்டக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார்.

அட்­ரோனி ஜெனரல் பக்­கூலா, உர்பா மசூ­துக்கு நல்­லா­வழ்த்­துக்­களை தெரி­வித்­துள்­ள­துடன் உர்பா குற்­ற­வியல் மற்றும் குடும்ப சட்­டத்தில் அனு­பவம் நிறைந்­தவர் எனவும் தெரி­வித்­துள்ளார்.

மற்றும் விக்­டோ­ரியா சட்டச் சேவை பிரதி பிர­தம அதி­காரி அனெடி விக்­கே­ரியும் உர்பா மசூதுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#Vidivelli

LEAVE A REPLY