வாழைச்சேனையில் பஸ்-மோட்டார் சைக்கில் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

0
180

murder kill crime accidentமட்டு – திருமலை பிரதான வீதியில் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்றிரவு 7.45 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கில் செலுத்துனர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நாகதம்பிரான் கோவில் வீதியை சேர்ந்த 34 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#News1st

LEAVE A REPLY